டெல்லி: குஜராத் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். அதன்படி முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 1ந்தேதியும் 2வது கட்ட தேர்தல் டிசம்பர் 5ந்தேதியும் நடைபெறுகிறது.

182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் டிசம்பர் மாதம் நிறைவு பெறுகிறது இதையடுத்து குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

அதன்படி, குஜராத்தில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் டிசம்பர் 1ம் தேதியும், இரண்டாம் கட்டம் டிசம்பர் 5ம் தேதியும் நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

குஜராத் சட்டமன்ற தேர்தல் விவரம்: (முதல் கட்டம் மற்றும் 2வது கட்டம்)

 வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்: நவம்பர் 5ந்தேதி மற்றும் நவம்பர் 10ந்தேதி

 வேட்புமனுத் தாக்கல்  செய்ய கடைசி நாள்: நவம்பர் 14ந்தேதி மற்றும் நவம்பர் 17ந்தேதி  

வேட்புமனு பரிசீலனை: நவம்பர் 15ந்தேதி மற்றும் நவம்பர் 18ந்தேதி  

வேட்புமனு வாபஸ் பெறும் நாள்: நவம்பர் 17ந்தேதி மற்றும் நவம்பர் 21ந்தேதி  

வாக்குப்பதிவு நாள்: டிசம்பர் 1ந்தேதி மற்றும் டிசம்பர் 5ந்தேதி

வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 8ந்தேதி.

ஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி ஹிமாச்சல பிரதேசத்துடன் ஒத்துப்போகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முழுப் பணிகளும் டிசம்பர் 10ஆம் தேதி நிறைவடையும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 99 இடங்களையும்,  காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றின.  குஜராத் சட்டசபையில் தற்போது பாஜகவின் பலம் 111 ஆகவும்,  காங்கிரஸ் பலம் 63 ஆகவும் உள்ளது.