சென்னை: அதிமுகவில் தற்போதுள்ள இரட்டை தலைமைகளுக்கு இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இரட்டைஇலையை முடக்க கோரி அதிமுக முன்னாள் உறுப்பினர் ஜோசப் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடுத்த மனுதாரருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தனர்.
அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே. ஜே. கட்சியின் நிறுவனருமான பி. ஏ. ஜோசப் என்பவர், அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை முடக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 5,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுமீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல்பெஞ்சான, தலைமைநீதிபதி முனிஸ்வர்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, இது பொது நலவழக்கா என மனுதாரரின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியதுடன், இது விளம்பர நல வழக்கு என்றும், மனுவை தள்ளுப செய்வதாக உத்தரவிட்டதுடன், மனுதாரர் PA ஜோசப்புக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்,.