சரித்திர சாதனை : ஆஸ்திரேலியா – இங்கிலாந்து முதல் நேரடி விமானப்பயணம்

Must read

ண்டன்

ஸ்திரேலியாவின் பெர்த் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய முதல் நேரடி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து விமானம் 17 மணி நேரப் பயணத்தில் இங்கிலாந்து ஹித்ரூ ஏர்போட்டை வந்து அடைந்தது.

நேற்று ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையில் ஆன முதல் நேரடி விமானம் ஆஸ்திரேலியா நாட்டு பெர்த் விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது.  சரித்திர சாதனை புரிந்த இந்த போயிங் 787 ரக விமானம் 230 பயணிகள் மற்றும் குழுவினருடன் கிளம்பியது.   சுமார் 14875 கிமீ தூரத்தை 17 மணி நேரம் ஐந்து நிமிடத்தில் இந்த விமானம் கடந்தது.

தனது சரித்திர பூர்வ முதல் தரையிறங்குதலை இன்று காலை 5.03 மணிக்கு வெற்றிகரமாக ஹீத்ரூ விமான நிலையத்தில் இந்த விமானம் நிகழ்த்தியது.   பயணம் மிகவும் சுமுகமாகவே இருந்ததாக விமான குழுவினர் தெரிவித்துள்ளனர்.  இதற்கு முன்பு ஏழு இடங்களில் நிறுத்தப் பட்டதால் இதே தூரத்துக்கு நான்கு நாட்கள் ஆனதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அதிக நேரம் பயணம் செய்வதால் ஏற்படும் விளவுகளை குறித்து ஆராய தங்களை பரிசோதிக்க சில பயணிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.   இந்த சோதனையை ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் நிகழ்த்துகிறது.    அந்தப் பயனிகளுக்கு சில சிறப்பு கருவிகளை அணிவித்து அவர்களுடைய மன நிலை, உணவுப் பழக்க மாறுதல் மற்றும் உடல்நிலை ஆகியவைகள் பரிசோதனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article