மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: திருநாவுக்கரசர் கண்டனம்

சென்னை,

ந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை யினர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீது இந்திய கடற்படையினரே துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நாளை போராட்டம் நடத்தப்போவதாக மீனவர் அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,  துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பிச்சை என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.   இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த மீனவர்களை நமது கடற்படையினர் ஏன் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்  என்று கேள்வி எழுப்பி உள்ள அவர்,  ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறி உள்ளார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடலோரக் காவல்படையினர்மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
English Summary
Firing on fishermen: The denunciation of the Thirunavukkarasar