திருச்சி போலீஸ் கமிஷனர் உள்பட 7 அதிகாரிகள் மாற்றம்!!

சென்னை,

7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் திருச்சி மாநகர ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி காவல் ஆணையராக இருந்த அருண் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்த பெரியய்யா கோவை காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பொது விநியோகம் மற்றும் தடுப்புப்பிரிவு ஆணையர் வெங்கட்ராமன், சென்னை காவல் நிர்வாக பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் நிர்வாகப் பிரிவு கண்காணிப்பு ஆணையர் தினகரன், சென்னை காவல் ஸ்தாபன ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஐஜியாக சோனல் வி.மிஸ்ரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
English Summary
7 officers including the Trichy Police Commissioner transfered