மும்பை:

மும்பை அருகே ரசாயண பொருட்கள்  சேமித்து வைக்கப்பட்டிருந்த  குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரசாயண பொருட்கள் தீயில் கருகி சாம்பலாயின.

மும்பை ஜோகேஸ்வரி கிழக்கு பகுதியில் உள்ள சுபாஷ்  ரோடு பகுதியில் உள்ள ஆசியான்  ரசாயண கிடங்கில் நேற்று இரவு 9.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

நேரம் ஆக ஆக தீ கொளுந்து விட்டு எரியத்தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீணைப்பு துறையினர் 4 வண்டிகளில் வந்து தீ அணைக்க முயற்சித்தனர். ஆனால், ரசாயணம் எரிந்து முடியும் வரையில் தீ அணைய வில்லை.

ரசாயணங்கள் எரிந்து முடிந்தபிறகே தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலைதான்  தீ அணைக்கப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், முதல் கட்ட விசாரணையில் மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.