முகேஷ் அம்பானியின் பங்களாவில் திடீர் தீ விபத்து!

மும்பை,

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மும்பை ஆடம்பர பங்களாவில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.

மராட்டிய மாநிலம் தெற்கு மும்பையில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆடம்பர  பங்களா உள்ளது.

ஆண்டிலியா என்று அழைக்கப்படும் இந்த பங்களா 27 மாடிகளை கொண்டது. ஹெலிபேடு உள்பட ஏராளமான வசதிகளை கொண்டது இந்த பங்களா. இதில்  சுமார் 600 பணியாளர்கள் வீட்டில் தங்கி வேலை செய்து  வருகின்றனர்.

இந்த பங்களாவில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் பல வாகனங்களில் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விசாரணையில்  பங்களாவின் 9வது தளத்தில்  தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ அங்குள்ள 4ஜி ஆண்டனா டவரிலிருந்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தினால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


English Summary
fire in Mukesh Ambani's Mumbai luxury bungalow