தேனி:
பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையின் தீயை அணைக்கும் பணியை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் 4,000 டன் அளவிலான மூலப்பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel