மதுரை,

லக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ பிடித்து பாதிப்படைந்துள்ள பகுதிகளை தேசிய புலனாய்வு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

 

உலக  புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் கடந்த பிப்ரவரி 2ந்தேதி தீ பிடித்தது. அங்குள்ள  சாலையோர கடைகளில் தீ பிடித்து எரிந்ததில் 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின. மேலும்,  கோவிலின்  மேற்கூரையிலும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சில தூண்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, கோவிலின் மேற்கூரை மற்றும் அந்த பகுதியில் தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட கோவிலின் தூண்கள் போன்றவற்றின் உறுதி தன்மையை குறித்து, , தடய அறிவியல் துறை  நிபுணர்கள் மற்றும்   வருவாய், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்தும், தீ விபத்து எப்படி ஏற்பட்டது, இதற்கு ஏதேனும் நாசவேலை காரணமாக இருக்குமா என்ற பல்வேறு கோணங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.