துரை

ஐசிஐசிஐ வங்கி காப்பிட்டு கிளையின் மதுரை கேகே நகர் கிளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை நகரில் கே கே நகர் பகுதியில் ஐசிஐசிஐ வங்கியின் காப்பீட்டு கழக கிளை உள்ளது.  நான்கு மாடி கட்டிடம் ஒன்றின் இரண்டாம் மாடியில் இந்த கிளை இயங்கி வருகிறது.   இன்று விடியற்காலை இந்த அலுவலகத்தில் இருந்து புகை வெளியானது.  இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதை ஒட்டி அண்ணா நிலையம், அனுப்பானடி, தல்லாகுளம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் வந்தது.  அது தவிர  தனியார் வாகனங்கள் மூலமும் தண்ணீர் வரவழக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.   தீ அணைப்பு பணி நடைபெறும் போது பொதுமக்களில் மூவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து உண்டானதாக கூறப்படுகிறது.  இந்த தீ விபத்தால்  அலுவலகத்தில் இருந்த 45 கணினிகள், மற்றும் பல முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி உள்ளது.   மொத்த சேதம் குறித்து இதுவரை தகவல்கள் வரவில்லை.

[youtube-feed feed=1]