நாகை அருகே வெல்டிங் பட்டறை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக, 3 கனரக வாகனங்கள் எரிந்து சேதமானது.

நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூரில் அருகே உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் தீயை அணைக்க முற்பட்டும், தீ வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வருவதற்குள், வெல்டிங் பட்டறை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 3 கனரக வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

பின்னர் வந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளித்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர், தீவிபத்து குறித்த காரணங்களை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.