மதுரையில் சிலிண்டர் கசிவால் விபத்து: இளைஞர் ஒருவர் படுகாயம்

Must read

மதுரையில் வீட்டில் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட விபத்தில் இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள மகபூப்பாளையம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். வீட்டில் இரவு நேரத்தில் சமையல் செய்து கொண்டிருந்த போது, சிலிண்டரில் லேசான கசிவு ஏற்பட்டது. இதை சரி செய்ய முயன்ற குமாரின் மகன் பெத்துராஜ் மீது திடீரென தீப்பற்றிக் கொண்டது. இதனால் பெத்துராஜ்க்கு பலத்த காயமடைந்தார். இதை கண்ட குமாரின் மனைவி மயக்கமடைந்தார்.

சம்பவமறிந்து இருவரையும் மீட்ட அப்பகுதியினர், இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்ற முயன்றனர். அப்போது அம்புலன்ஸ் ஊழியர் மீதும் தீ பரவிட, அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து பெத்துராஜ் மற்றும் அவரது தாயாரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பெத்துராஜ் உயிரிழந்தார்.

More articles

Latest article