சென்னை:
கொரோனா தொற்று காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டு, அவர்களின் வீடுகளில் அறிவிப்பு ஒட்டப்பட்ட நிலையில், அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிந்த 40 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பலரும், அதை கண்டுகொள்ளாமல் தெருக்களிலும், கடைகளுக்கும் சென்று வருகின்றனர். இதனால் நோய்த் தொற்று உச்சமடைந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நபர்கள் அவர்களது கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆனால், பலர், அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறைக்கும், சென்னை மாநகராட்சிக்கும் ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன.
இதையடுத்து, கொரோனா அறிகுறி காரணமாக வீட்டில் தனிமைபடுத்தப்பட்ட நபர்கள், வெள்யி சுற்றி திரிந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்து எஃப் ஐஆர் பதிவு செய்துள்ளனர். இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 40 பேர் மீது எஃப்ஐஆர் போடப்பட்டு உள்ளது.
அதன்படி திருவொற்றியூரில் 4 பேர் மணலியில் ஒருவர், மாதவரத்தில் ஒருவர், தண்டையார் பேட்டையில் 7 பேர், ராயபுரம்த்தில் 7 பேர், திரு.வி.நகரில் 1, அம்பத்தூரில் 1, அண்ணாநகரில் 3 பேர், தேனாம்பேட்டையில் 3 பேர், கோடம்பாக்கத்தில் 3, வளசரவாக்கம் 3, அடையாறு 2, பெருங்குடி 2, சோழிங்கநல்லூர் 2 ஆக மொத்தம் 40 பேர்.