டெல்லி:

டந்த மார்ச் 24ந்தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல், மே மாதங்களில்  ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது பாதியாக குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. ஏப்ரல் மாதத்தில் 46 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

ஊரடங்கு காலத்தின்போது நோய் தொற்று ஒருபுறம், வேலையில்லாமல் வாழ்வாதாரம் பாதிப்பு என சாமானயி மக்கள் அல்லல்பட்டுக்கொண்டிருந்தனர். இந்த காலக்கட்டத்தில் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். இதனால் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் வெளியிடப்பட்ட  அறிவிப்பில்,

கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும்  ஏடிஎம்மில் ரூ. 2,86,463 பணம் எடுக்கப்பட்டுள்ளது.  மார்ச் மாதம் ரூ.2,51,075 எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏப்ரல் மாதம் ரூ.1,27,660 மட்டுமே  எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஏப்ரல் மாதத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் பயன்பாடு பாதியாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.