சென்னை: கராத்தே, குங்ஃபூ உள்பட தற்காப்புக்கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் கண்டெடுங்கள் என திமுக மாநிலத் தொண்டர் அணிச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
திமுகவில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தொண்டர் அணி என 23 சார்பு அணிகள் இருக்கின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர் நிர்வாகிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த அணிகளுக்கு பொறுப்பாளர்கள் டிசம்பர் 31ந்தேதி அறிவிக்கப்பட்டனர்.
இதில், திமுக மாநில தொண்டரணி செயலாளராக பெ.சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தொண்டரணி நிர்வாகிகளாக சிலம்பம், தேக்வாண்டோ, கராத்தே, குங்ஃபூ உள்ளிட்ட தற்காப்புக்கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ள தோழர்களை கண்டெடுத்திட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
திமுகவில் தற்காப்பு கலைகளில் தேர்வானர்களை தேர்ந்தெடுப்பது தொடர்பான வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுங்கட்சியான திமுகவில் அடியாட்கள் எதற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் தொண்டர் அணி சிறப்பாக செயல்படும் வகையில், செயல்திறன் மிக்க நிர்வாகிகள் நியமிக்கப்படவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திமுகவில் 23 அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்! துரைமுருகன் அறிவிப்பு…