கந்துவட்டி புகார் கூறப்படும் ஃபைனான்சியர் மோசமான நபர் அல்ல. அவர் உத்தமர் என்று திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவனத்தின் பொறுப்பாளரமான அசோக்குமார் கடந்த 21ம் தேதி சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஃபைனான்சியர் அன்புச்செழியன் தான் கொடுத்த கடனுக்காக மிரட்டியதை அடுத்து தற்கொலை செய்தகொண்டதாக அசோக்குமார் எழுதியதாக கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.
நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் உட்பட திரைத்துறையினர் பலர், அன்புச்செழியனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உட்பட பல படங்களை இயக்கிய சீனுராசாமி, “அன்புச்செழியன் உத்தமர்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை. எம்.ஜி.ஆர். சிவாஜி பன்ற நடிகர்கள் இன்று இல்லை. நான் நியாயத்தின் பக்கமே இருப்பேன்ட என்று சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.