சென்னை:

மிழகத்தில் மின் இணைப்புகளுக்கான டெபாசிட் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குறைந்தது ரூ.1,000 முதல் ரூ.2000 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகமே நிதிநெருக்கடியில் தள்ளாடி வருவதை புள்ளி விவரங்கள் கோடிட்டு காட்டி வருகின்றன. அதுபோல தமிழக மின்சார வாரியமும் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

ஆனால், தமிழக முதல்வர் உள்பட பல அமைச்சர்கள் லட்சக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்துக்கொண்டு ஹாயாக உலகை சுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள்.

நிதி நெருக்கடியை சமாளிக்க தற்போது மின்சாரம் தொடர்பான கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு சேய்துள்ளது. அதன்படி, மின்  பதிவுக்கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், மின்பயன்பாடு உள்பட பல கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் இருந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு,  மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், மின்சார வைப்பு தொகை ரூ.1,600 என்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ரூ.4 ஆயிரத்து 600 ஆக மாற்ற அனுமதி கோரியிருந்தது  அமைக்கும்படி கூறி இருந்தது.

இது மனுமீது ஆய்வு நடத்தி தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மாநில ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மின்சார வாரியம், தொழில், வணிகம், நுகர்வோர், கல்வி என பல்வேறு துறைகளை சேர்ந்த குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும்,  மின்வார வாரியத்தின் நிதி நெருக்கடி , மின்சார இணைப்புக்கான டெபாசிட் தொகையை உயர்த்தலாமா என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், மின்சார டெபாசிட்  கட்டணத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பது.

இதுகுறித்து கூறிய மின்வாரிய அதிகாரி, தமிழக மின்சார வாரியத்துக்கு இயற்கை பேரிடடரகளால் பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த இழப்பை சரி செய்யும் வகையில்,   மின்சார இணைப்புக் கான டெபாசிட் தொகையை உயர்த்த வேண்டியது அவசியமாகி உள்ளது. மேலும், இது தொடர்பாக   பொதுமக்களிடமும் விரைவில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி முடிவு செய்வோம் என்று கூறினார்.

ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி,  ஒரு கேவிஏ (kva) மின் இணைப்புக்கான டெபாசிட்  தொகை தற்போது வசூலிக்கப்படும் ரூ.200ஐ ரூ.1000ம் ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் மும்முனை இணைப்பு (3 phase)க்கான டெபாசிட் தொகை, ரூ.600 முதல் ரூ.1800 வரை உயரலாம், மின்சார இணைப்புகளுக்கான பதிவு மற்றும் செயலாக்க கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.400 வரை உயரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வைப்பு தொகையில், புதிய தொழில்துறை பிரிவுகளுக்கு குறைந்த மின் அழுத்த பகுதிக்கு ஒரு கிலோவாட்டிற்கு ரூ.600-ல் இருந்து ரூ.2 ஆயிரம் ஆக மாற்றப்படுகிறது. அதிக மின்அழுத்த பகுதி நுகர்வோர்களுக்கு புதிய விகிதப்படி ஒரு கிலோவாட் ஆம்பியருக்கு ரூ.800-ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 100 ஆக இருக்கும்.

அதுபோல, இனிமேல்  ஒரு முனை இணைப்புக்கு (single phase) ரூ.580-ம், மும்முனை இணைப்புக்கு (3 phase)  ரூ.1,920 கட்டணம் வசூலிக்கப்படும்.  இந்த கட்டண உயர்வு குறித்து திட்டம் தயாரிக் கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் இறுதி செய்து அறிவிப்பு வெளியாகும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.