டில்லி

யிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டைக்காக்கப் போரிடும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அரசு பல உதவிகளைச் செய்து வருகிறது.  அவ்வகையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் மாதம் ரூ.1000 உதவித் தொகை அளித்து வருகிறது.

இந்திய அரசு இந்த தொகையை தற்[ப்ப்து ரூ.3000 ஆக உயர்த்தி உள்ளது.  இந்த தொகை பாதுகாப்புத்துறை அமைச்சர் முன்னாள் ராணுவ வீரரக்ள் நல உதவியின் கீழ் வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டிவிட்டரில், ஆதரவற்ற நிலையில் உள்ள உயிரிழந்த ராணுவ வீரர்கள் குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000லிருந்து ரூ.3000 ஆக அதிகரிக்கப்படுகிறது.  இதனால் பல குழந்தைகள் பயன் பெறுவார்கள்” என பதிந்துள்ளார்.