டில்லி
இன்று மாலை 4 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்துகிறார்.
மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்னும் 4 நாட்களில் முடிவடைய உள்ளது.
ஊரடங்கால் அனைத்து தொழிலகங்களும் மூடப்பட்டுள்ளன.
பல தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
நேற்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
அப்போது அவர் நாட்டு மக்களுக்காக ரூ.20 லட்சம் கோடி நிவாரண உதவிகள் வழங்க உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த உதவி குறித்த விவரங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என தனது உரையில் பிரதமர் கூறி இருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்துகிறார்.
இந்த செய்தியை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது