சென்னை: நிதிநிலை அறிக்கையின்போது அறிக்கையை வாசித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் குறித்து செய்தி வெளியிட்ட தினமலர்  நாளிதழ்மீது உரிமை மீறல் பிரச்சினை சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது. இதை  உரிமை குழுவுக்கு சபாநாயகர் அப்பாவு அனுப்பி வைத்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 20ஆம் தேதி 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இது தொடர்பாகக் கடந்த 22ஆம் தேதி செய்தி வெளியிட்ட தினலமர் நாளிதழ் ‘தலைசொறிந்து திக்கித் திணறி!’, ’தூங்கி வழிந்த அமைச்சர்கள்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. அதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதற்கிடையே, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தினமலர் நாளிதழின் பெயரை குறிப்பிடாமல், ”பட்ஜெட்டை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகின்றனர். ஆனால், பெயர் சொல்ல நான் விரும்பவில்லை. ஒரு நாளிதழுக்கு மட்டும் நம்மை பாராட்ட மனமில்லை. அவர்கள் பாராட்டினால், சந்தேகப்பட வேண்டியிருக்கும்; பாராட்டவில்லை என்றால் கவனமாக இருக்க வேண்டும். பட்ஜெட்டில் குறை இல்லை என்பதற்காக, கேவலமாக சித்தரித்து விமர்சனம் செய்கின்றனர்; அமைச்சர்கள் புகைப்படத்தை வெளியிடுகின்றனர் அமைச்சர்கள் கீழே பார்த்துக் கொண்டிருந்தால் கூட, தூங்குவது போலத் தான் புகைப்படத்தில் தெரியும். அப்படியொரு புகைப்படத்தைக் கீழ்த்தரமாக வெளியிட்டுள்ளனர்” என பேசியதாக தவல்கள் வெளியாகி இருந்தன.

இதுதொடர்பாக  அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட தினமலர் பத்திக்கை மீது, சட்டபேரவையில் அவை உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டது. இந்த விவாதத்தில் பேசிய  திமுக எம்எல்ஏ (தவாக) வேல்முருகன், இந்த அவை மிக கண்ணியத்திற்குரிய, மாண்பிற்குரிய ஒரு அவை. நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தமிழக மக்களுக்கான நிதிநிலை அறிக்கையை வாசித்தபோது அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் எங்கள் இருக்கைக்கு முன்னால் பொருத்தப்பட்டிருக்கிற கணினியை கீழ்நோக்கி, வரிகளை படித்துக் கொண்டிருந்தோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட பத்திர்க்கை தவறாக செய்தி வெளியிட்டிருக்கிறது.  இந்த செய்தி அவையின் மாண்புகளை அவமதிக்கும் வகையில் வெளிவந்துள்ளது. இது பெரும் விவாதங்களை சமூகவலைதளங்களில் உருவாக்கி உள்ளது.

இந்த அவையினுடைய மாண்புக்கு களங்கம் கற்பிக்கின்ற செய்தி வெளியிட்ட இந்த பத்திரிக்கையின் மீது இந்த அளவை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற உரிமை மீறலை 219-கீழ் கொண்டு வருகிறேன் என்றார்.

இதையடுத்து பேசிய பேரவை தலைவர் அப்பாவு,  இப்பிரச்சனையை மேலேழுந்தவரியாக பார்க்கும்பொது, இதில் அவை உரிமை மீறல் இருப்பதாகத் தெரிந்தால், இப்பிரச்சனை குறித்து ஆய்ந்து, அறிக்கை அளிப்பதற்காக பேரவை விதி 226கீழ் அவை உரிமைக் குழுவிற்கு அனுப்புகிறேன் என்றார்.