சென்னை: தமிழ்நாடு  நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் மூன்றாவது முறையாக 2023-24ம் ஆண்டுக்கான  பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில்  தாக்கல் செய்து வருகிறார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 2021 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  மூன்றாவது முறையாக இன்று, இரண்டாவது முழுமுதல் பட்ஜெட் தாக்கல் செய்தார்  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் ய்ரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது.

அதைத்தொடர்ந்த, 2023 -24ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. இதில்  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ர். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே காகிதமில்லா  தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படுகிறது.

சட்டபேரவை தொடங்குவதையொட்டி, கோட்டை மற்றும் அதைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்று காலை 9மணி முதலே சட்டப்பேரவைக்கு உறுப்பினர்கள் வரத் தொடங்கி விட்டனர். அதிகாரிகள் காலையிலேயே வந்து தங்களது பணிகளை செய்து வரும் நிலையில், 9.30 அளவில் அமைச்சர்கள், ஒவ்வொருவராக அவைக்கு வரத்தொடங்கினர். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவு எம்எல்ஏக்களும் அவைக்கு வருகை தந்தார். அதுபோல ஓபிஎஸ் தனது ஆதரவு எம்எல்ஏவுடன் வருகை தந்தார். இறுதியில்,   முதலமைச்சர் ஸ்டாலின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க, சட்டப்பேரவைக்கு வந்தார். அவருடன் பிடிஆரும் வருகை தந்தார்.

அதைத்தொடர்ந்து வழக்கமான நடைமுறைகளின்படி, அவை தொடங்கியது. அதையடுத்துநிதியமைச்சர் பிடிஆர் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

இன்றைய பட்ஜெட்டில் பெண்களுக்கான உதவித்தொகை ரூ.1000 உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,  பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, எத்தனை நாட்கள் விவாதங்கள் நடைபெறும் என்பது குறித்து பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.