டில்லி
அரசு வங்கிகள் இணைப்புக் குறித்து இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்
பாஜக அரசு நிதித்துறையில் பல மாறுதல்களைச் செய்து வருகிறது. தற்போது இந்தியப் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்துள்ளது. அதை ஒப்புக் கொள்ள பாஜக அரசு மறுத்தாலும் தொடர்ந்து பல மாறுதல்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை ஊடகவியலர்களை சந்தித்தார்.
அப்போது அவர் நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகள் இணைப்பு குறித்து அறிவித்துள்ளார். அதன்படி தற்போதுள்ள 12 பொதுதுறை வங்கிகள் கீழ்க்கண்டவாறு இணைக்கப்பட உள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கி, ஓரியண்டல் காமர்ஸ் வங்கி ஆகியவை இணைய உள்ளன. இந்த வங்கிகளில் மொத்த 11437 கிளைகள் உள்ளன. இந்த வங்கிகளில் ரூ.17.95 கோடி அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது.
யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் இணைய உள்ளன ..
இந்தியன் வங்கியும் அலகாபாத் வங்கியும் இணைந்து 7 ஆவது பெரிய பொதுத்துறை வங்கியாக மாற உள்ளன. இந்த் வங்கியில் ரூ.8.08 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகின்றன.
கனரா வங்கி மற்றும்சிண்டிகேட் வங்கி இணைந்து 4 ஆவது பெரிய வங்கியாக மாற உள்ளனர். இந்த வங்கிகள் ரூ.15.20 லட்சம் கோடி வர்த்தகம் செய்து வருகின்றன.
பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் செண்டிரல் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரு வங்கிகளும் தனியாக இயங்க உள்ளன. இந்த வங்கிகள் வேறெந்த வங்கிகளுடனும் இணையப்போவது இல்லை.
என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.