
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ரூம்’.
பத்மாமகன் இயக்கும் இப்படத்தின் சிறப்பம்சமே, படத்தின் பெரும்பகுதி பாத்ரூமுக்குள்ளேயே நடப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது தான்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் அபிஷேக் வர்மா ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக மனோசித்ரா நடிக்கிறார்.
திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார்.
[youtube-feed feed=1]