சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வந்த உதயம் தியேட்டரில் சினிமா காட்சிகள் நிறுத்தப்பட்டது.
2.13 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் அலுவலக வளாகத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பைக் கட்ட திட்டமிடப்பட்டதை அடுத்து இந்த இடம் பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து இந்த திரையரங்கில் தற்போது பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
1983ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தியேட்டரில் உதயம், சூரியன், சந்திரன் தவிர மினி உதயம் ஆகிய திரையரங்குகள் உள்ளது.