பெரிய பாண்டியன் – கார்த்தி

சென்னை:

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்தினரை நேரில் செந்தித்து நடிகர் கார்த்தி ஆறுதல் கூற இருக்கிறார்.

நடிகர் கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம், “தீரன் அதிகாரம் ஒன்று”. வட மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள், தமிழகத்தில் கொலை, கொள்ளைகளில் ஈடுபட.. அவர்களைத் தேடிச்சென்று கைது செய்யும் காவல் அதிகாரியாக இந்தப் படத்தில் கார்த்தி நடித்தார். 2005ம் ஆண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது.

அதே போல சமீபத்தில் கொள்ளையர்களைப் பிடிக்க தமிழகக் காவல்துறையைச் சேரந்த தனிப்படை ராஜஸ்தான் மாநிலம் சென்றது. அங்கு கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணமடைந்தார்.

அவரது உடல் அஞ்சலிக்காக நெல்லை மாவட்டம் சாலைப்புதூரில் வைக்கப்பட்டது. பிறகு இறுதி சடங்குகள் நடந்தன.   இன்று அங்கு சென்று, நடிகர் கார்த்தி, பெரியபாண்டியன் திருவுருவப்படத்துக்கு  அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.

குடும்பத்தினருக்கு ஆறு