ஸ்லாம்பாத்

பாகிஸ்தான் தொலைக்காட்சி விவாத நிகழ்வில் அரசியல் விமர்சகர்கள் திடீரென கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பிரபல தொலைக்காட்சி சேனல் சார்பிலொரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வழக்கறிஞர் ஷேர் அப்துல் கான் மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் அப்சான் உல்லா கான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

நேரலையில் ஒளிபரப்பான இந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் யூதர்களின் முதல்வர் என அப்சான் உல்லாகான் விமர்சித்ததால் அவருக்கும் அப்சல் கானுக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளைப் பேசி வந்த நிலையில் திடீரென அப்சல் கான் எழுந்து சென்று அப்சான் உல்லா கானை சரமாரியாக தாக்கி உள்ளார்.  அவரும் பதிலுக்கு தாகக முற்பட்டதால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரையும் சமாதானம் செய்துளன்ர்.

இந்த கைகலப்பு காட்சிகள் பாகிஸ்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.