கத்தார்: FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரில் நடைபெற உள்ள இன்றைய ஆட்டங்கள் பிற்பகல் 3.30 மணிக்கு மொரோக்கோ – குரோஷியா அணிகள் மோதுகிறது. மாலை 6.30 மணிக்கு ஜெர்மனி – ஜப்பான் அணிகள் மோது. இன்று மட்டும் 4 போட்டிகள் நடைபெறுகிறது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா எனப்படும் சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு 22-வது உலக கோப்பை கால்பந்து தொடர் அரபு நாடான கத்தாரில் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 18-ந் தேதி வரை போட்டிகள் நடக்கிறது. போட்டிகள் நடைபெறும் 8 மைதானங்களிலும் ஆல்கஹால் கலந்த பீர் விற்பனைக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.
பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மொரோக்கோ – குரோஷியா அணிகள் மோதுகின்றன.
மாலை 6.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஜெர்மனி – ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
இரவு ரவு 9.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஸ்பெயின் – கோஸ்டா ரிக்கா அணிகள் மோதுகின்றன.
நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பெல்ஜியம் – கனடா ஆகிய அணிகள் மோதுகின்றன.