பெரா வழக்கு: டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை:

ந்நிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் வரும் 16-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் அரசு தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்து முடிக்கவும் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய கோரி டி.டி.வி.தினகரன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அன்னிய செலாவணி மோசடி வழக்கு காரணமாக சென்னை எழும்பூர் பொருளாதார கோர்ட்டில் டிடிவி தினகரன் கடந்த 1ந்தேதி  ஆஜரானார். அப்போது அவர்மீது சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி அவர்மீது புதியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  இந்த வழக்கில் இன்றைய விசரணையின்போது, ஐகோர்ட்டு, அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வரும் 16ந்தேதி எழும்பூர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
English Summary
Fera case: ttv dinakaran should appear on the egmore court on 16th august, chennai high court order