சென்னை:
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான வி.கே.சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு கள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சசிகலா மற்றும் அவரது கணவர் மறைந்த நடராஜன், அவரது உறவினர் பாஸ்கரன் மற்றம் ஜெ.ஜெ டிவி நிர்வாகம் மீது வெளிநாட்டில் இருந்து முறைகேடாக தொழில்நுட்ப கருவிகள் வாங்கியதாக அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் சென்ரனை பொருளாதார குற்றவியல் நீதி மன்றத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற வருகிறது. 5 அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் சசிகலா மீத சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே சாட்சிகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில்குற்றம் சாட்டபட்டவர்களிடம் நீதிபதி கேட்டுஎழுப்பி பதிலை பதிவு செய்ய உள்ளார்.
இந்த நடைமுறைக்காக சசிகலாவை வரும் 13ம் தேதி ஆஜர்ப்படுத்த பெங்களூர் சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சசிகலா வருவாரா என்பது இன்னம் ஓரிரு நாளில் தெரிய வரும்.