சென்னை:
சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வழக்கில், குறுக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என டிடிவி. தரப்பில் நீதி மன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதை நிராகரித்த நீதிபதி, உடனே குறுக்கு விசாரணையை நடத்த உத்தரவிட்டார். அதையடுத்து அடுத்தக்கட்ட விசாரணையை மே1ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜரானார்.
அப்போது இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியான அமலாக்கத் துறை முன்னாள் அதிகாரி ஜானகிராமனிடம் குறுக்கு விசாரணை நடத்த தினகரன் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, டிடிவியின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி மலர்மதி, “கடந்த 4 மாதங்களாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. விரைவாக இவ்வழக்கை முடிக்க வேண்டும் என்று கூறினார். எனவே, ஏற்கனவே தெரிவித்தபடி, இன்றே உங்கள் தரப்பு குறுக்கு விசாரணையை நடத்துங்கள் என்று உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, அரசு தரப்பு சாட்சியிடம் ஒரு மணி நேரம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை மே1ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.