டில்லி:

நாடு முழுவதும் வரும் 9ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காவிரி பிரச்சினை, ஆந்திராவில் சிறப்பு அந்தஸ்து பிரச்சினை, வட மாநிலங்களில் எஸ்.டி., எஸ்.சி.சட்ட திருத்தத்திற்கு எதிரான பிரச்சினை என பல பிரச்சினைகள் நடைபெற்று வருகின்றன.

வட மாநிலங்களில் நடைபெற்று போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. போராட்டம் காரணமாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, நாடு முழுவதும் வரும் 9ம் தேதி காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதம் இருக்கப்பபோவதாக அறிவித்துள்ளது.