சென்னை,

ன்னிய செலாவணி மோசடி வழக்கு காரணமாக சென்னை எழும்பூர் பொருளாதார கோர்ட்டில் டிடிவி தினகரன் இன்று ஆஜரானார்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி அவர்மீது புதியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது.

வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளது தொடர்பான வழக்கில் ஏற்கனவே குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அது சென்னை ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டு, புதிய குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது.

வெளிநாட்டில் இருந்து தனியார் டிவி ஒன்றுக்கு ஒளிபரப்பு சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட தில் முறைகேடுகள் நடைபெற்றது. இதன்மூலம் பெறப்பட்ட பணம், இங்கிலாந்தின் வர்ஜின் தீவில் பர்க்லே வங்கி மூலம் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம், ஐரோப்பா லண்டன் ஹாப்ஸ் கேரப்ட் ஓட்டல் பெயரில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

மேலும், அதேபோல், டிப்பர் இன்வெஸ்மென்ட், பேனியன் டிரீ, டர்க்கி என்ற நிறுவனங்களுக்கு 36.36 லட்சம் அமெரிக்க டாலரையும், 1 லட்சம் பவுண்ட் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக ஒரு வழக்கும் அமலாக்கப் பிரிவால் தொடரப்பட்டது.

இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் தரப்பபு வழக்கறிஞர்  மற்றும் அமலாக்க பிரிவு வழக்கறிஞரும் தங்களது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர்.

இதையடுத்து, தினகரன் தரப்பு வாதத்தை தள்ளுபடி செய்த நீதிபதி, இன்று (ஆகஸ்டு 1ந்தேதி) குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது. இதற்காக டிடிவி.தினகரன் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். இன்று அவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என தெரிகிறது.