சென்னை:
பெரா (அந்நிய செலாவணி மோசடி) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா வரும் 28ந்தேதி காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக சென்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நேரில் ஆஜராக உத்தரவிட்டருந்த நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் காணொளி காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்கப்படி கோரியிருந்தார். அதற்கு சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியது. அதையடுத்து வரும் 28ந்தேதி வீடியோ காண்பரன்சிங் மூலம் ஆஜராக சென்னை எழும்பூர் பொருளாதாக குற்றவியல் நிதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஜெ.ஜெ. தொலைகாட்சிக்கு வெளி நாட்டில் இருந்து எலெக்ட்ரானிக் ஒளிபரப்பு உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவினர் அந்நியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தனர்.
1996ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு கடந்த 23 ஆண்டுகளாக எழும்பூர் பொருளாதார நீதி மன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. வழக்கில் கடந்த ஆண்டு பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதேபோல பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மீதும் காணொலிக் காட்சி மூலமாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
தற்போது வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கேள்வி விசாரணைக்காக சசிகலா வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதை எதிர்த்து சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தான் காணொலி காட்சி மூலமாக விசாரணைக்கு ஆஜராக அனுமதி கோரியிருந்தார். இதற்கு சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் சசிகலா மீதா பெரா வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா ஆஜராவது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள அனுமதி குறித்து அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதைடுத்து சசிலா மே 28-ம் தேதி காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.