பெண் குலம் காத்த கலைஞர் – கவிஞர் ராஜ்குமார் மாதவன்

சிசுவாக பிறக்கையில்
பெண்டாக பார்க்க
சில நல்ல உள்ளங்களால்
கள்ளி பால் தவிர்த்தேன்
அழுதே வந்தேன்
நரகம் என்று அறிந்தே !

அடுப்பூதும் பெண்ணுக்கு
படிப்பே சுமையாக
உணவு கிடைக்கிதுன்னு
பள்ளிப்பக்கம் எட்டிப்பார்த்தேன்
ஊருக்கு வெளியில் பள்ளியின்னு
குன்னி படுக்க
இலவச பஸ் பாஸ்
அழைத்து சென்றது எட்டு மயில் தள்ளியும்!

கத்திரிக்கா முத்தினா
கடைத்தெருவுக்கு வருமுன்னு
பெரியமனுஷி ஆனவுடன்
போதும் படிப்பு-
வீட்டு முற்றத்திலே முணுமுணுக்க
எட்டாம் வகுப்பு வந்தா
தாலிக்கு தங்கமுனு
பள்ளி படிப்பை தொடர்ந்தாச்சு !
பள்ளி போயிவர
மிதிவண்டி,
பத்தாம் வகுப்பு தாண்டினா
மடி கணினி தருவதால
பனிரெண்டாம் வகுப்ப தாண்டியாச்சு !

பேர்சொல்ல பிள்ளைன்னு
சொத்து சுகம் தந்தாங்க
பெண்ணாக பிறந்ததாலே
வெறுங்கைய தந்தாக- பின்னாளில்
சொத்துல சரிபாதி
எம்நீதி என்றாங்க

வீட்டுக்குள்ள பெண்ணு
வெளிவீதி எதுக்கு ?
பெண்டு பிள்ளை
பேணும்
மனித எந்திரமா ?
கேட்டு- உள்ளாட்சி
ஒதுக்கீடு பெண்ணுரிமை
ஆனதால் -மண்ணுக்குள்ள புதைஞ்சுவள
தரணியாள செய்தாக
செய்தது யாருன்னா
தரணி போற்றும் கலைஞருங்க !

சிசுவாக பிறக்கையில்
பெண்டாக பார்க்க
சில நல்ல உள்ளங்களால்
கள்ளி பால் தவிர்த்தேன்
அழுதே வந்தேன்
நரகம் என்று அறிந்தே !

மண்ணுக்குள்ள புதைஞ்சவள
தரணியாள செய்தாக
செய்தது யாருன்னா
தரணி போற்றும் கலைஞருங்க !