கலிபோர்னியா:
மெரிக்காவில்   இந்த ஆண்டுக்கான, “மிஸ் அமெரிக்கா” வாக ராணுவ வீராங்கனை தேஷானா பார்பர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
“மிஸ் அமெரிக்கா” அழகிப்போட்டி நேற்றுமுன்தினம் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களை சேர்ந்த 51 இளம்பெண்கள் இப் போட்டியில் கலந்து கொண்டனர்.
போட்டியின் முடிவில் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கொலம்பியா மாவட்டத்தை சேர்ந்த தேஷானா பார்பர் ‘மிஸ் அமெரிக்கா’வாக தேர்வு செய்யப்பட்டு முடி சூட்டப்பட்டார்.
26 வயதான தேஷானா பார்பர் அமெரிக்கா ராணுவத்தில் அதிகாரிய பணி புரிந்துவருகிறார்.
தேஷானா பார்பரிடம் பெண் ராணுவ வீரர்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ‘‘நாங்கள் ஆண்களை போலவே கடுமையானவர்கள்’’ என பதிலளித்தார்.
201606070343225998_Choose-blonde-female-officer-in-the-US-Army_SECVPF
போட்டியில் 2-வது இடத்தை பிடித்த ஹவாய் மாகாணத்தை சேர்ந்த செல்சியா ஹார்டினாரிடம் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கும் டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் ஆகிய இருவரில் யாருக்கு ஆதரவு அளிப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.  இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ஹார்டின் யார் பெயரையும் குறிப்பிடாமல், ஜனாதிபதிக்கு தேவையான தகுதிகள் மற்றும் குணங்கள்  பற்றி  கூறினார்.
அமெரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்டு உள்ள தேஷானா பார்பர் இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ்) போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்.