சென்னை:

பெப்சி விவகாரம் காரணமாக ரஜினியின்  “காலா”, விஜயின் ‘மெர்சல்’ உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களின்  படப்பிடிப்புகள்  தடை பட்டுள்ளன.

 

சம்பள விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், பெப்சி தொழி லாளர்கள் அமைப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

படப்பிடிப்பை,  பெப்சி  தொழிலாளர்கள் இல்லாமல், யாரை வேண்டுமானாலும் வைத்து படப்பிடிப்பு நடத்தலாம் என்று  தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்பட்டது. மேலும், பெப்சி தொழிலாளர்ளின் சம்பள பிரச்சினையிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதற்கு பெப்சி அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து,  இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வ மணி ஏற்கனவே, பெப்சி தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து, தயாரிப்பாளர் சங்கம், ஜூலை 31ம் தேதிக்குள் பேசி முடிக்கலாம் என்று உறுதி அளித்தது.  ஆனால் நிறைவேற்ற வில்லை. பேசிய சம்பளம் முடிவுக்கு வராததால், ஆகஸ்டு 1  முதல் பெப்சி தொழிலாளர்கள் எந்த படப்பிடிப்பிலும் பணிபுரிய மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.

அதன்படி இன்றுமுதல் பெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக 30க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு தடை செய்யப்பட்டுள்ளது.

பெப்சியில் 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக  இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் திரைப்படத்துறையை மட்டுமே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.