ண்டன்

ட்சத்திர டென்னிஸ் வீரர்களான நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் ஃபெடரர் விம்பிள்டன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

தற்போது லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் போட்டி நடந்து வருகிறது.   இது கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாகும்.  நேற்று இந்த தொடரில் காலிறுதிக்கு முந்தைய போட்டிகள் நடந்தன.   இதில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் சிலியின் கிறிஸ்டியன் கேரின் மோதினார்கள்

ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஜோகோவிச் ஆதிக்கம் அதிகமாகக் காணப்பட்டது.  ஜோகோவிச் தன்னை எதிர்த்து ஆடிய கிறிஸ்டியன் கேரினை 6-2,6-4, 6-2 என்னும் செட் கணக்கில் தோற்கடித்தார்.  இதன் மூலம் ஜோகோவிச் காலிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த நட்சத்திர வீரரான ரோஜர் ஃபெடரருடன் இத்தாலியைச் சேர்ந்த லோரன்ஸோ சொனிகோ மற்றொரு போட்டியில் மோதினார்.  இதில் ஃபெடரர் 7-5,6-4,6-2 என்னும் செட் கணக்கில் சோனிகோவை மிக எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

தற்போது 39 வயதாகும் ரோஜர் ஃபெடரர் இந்த வெற்றியின் மூலம் விம்பிள்டன் தொடரில் 18 ஆம் முறையாக காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.