கடனை திருப்பி செலுத்ததாத மால்-ஐ கையகப்படுத்தியது பெடரல் வங்கி

Must read

கொச்சி:

லுவாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் வங்கியான பெடரல் வங்கி, வாங்கிய கடனை செலுத்தாத காரணத்தால், திரிசூர் கொடுங்கல்லூரில் இயங்கும் ஷாப்பிங் மால் ஒன்றை கையகப்படுத்தியுள்ளது.

அலுவாவை தலைமையிடமாகக் கொண்டு வரும் தனியார் வங்கியான ஃபெடரல் வங்கி, திரிசூரின் கொடுங்கல்லூரில் இயங்கும் ஒரு ஷாப்பிங் மாலைக் கையகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தெரிவிக்கையில், வெளிநாட்டு வாழ் இந்தியரான என்ஜாரக்கட்டு பஷீர் என்பவருக்கு சொந்தமானது நான்கு மாடி கொண்ட செண்ட்ரோ மால். இந்த மால்-லுக்காக பஷீர் பெடரல் வங்கியிடம் இருந்து கடன் பெற்றிருந்தார். வாங்கிய கடனை செலுத்தாத காரணத்தால் இந்த மால் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

நான்கு மாடி கொண்ட வணிக வளாகத்தில் அடித்தளமும் 29 வாடகைதாரர்களும் உள்ளனர். ஷாப்பிங் மாலைக் கையகப்படுத்த ஃபெடரல் வங்கி 2002 ஆம் ஆண்டு SARFAESI சட்டம் விதிகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்கி பாதுகாப்பு மற்றும் நிதி புனரமைப்பு பிரிவு 13 (4) (ஈ) மற்றும் பிரிவு 13 (5) ஆகியவற்றின்படி, சொத்துக்கள் மற்றும் பாதுகாப்பு வட்டிச் சட்டம், 2002, ஷாப்பிங் மாலில் கடை வைத்திருப்பவர்களுக்கு ஏற்கன்வே இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாடகைதாரர்களை வாடகையை வங்கிக்கு அனுப்பி வைக்குமாறும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, மால்-ஐ கையகப்படுத்தும் பணிகளை வங்கி மேற்கொண்டது. இந்த பணியில் சுமார் 30 அதிகாரிகள் ஈடுபட்டனர். கடன் வாங்கியவரின் மொத்த நிலுவைத் தொகை 8.5 கோடி ரூபாய் என்றும், தனிநபர் கடனாக பெற்ற1.5 கோடி ரூபாய் தவறியதற்காக வங்கி மால்-ஐ கையகப்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு, கடன் நிலுவைகளை வசூலிக்க திவாலா நிலை மற்றும் திவால்நிலை கோட் 2016 இன் விதிமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் ஒரு விமானத்தை கையகப்படுத்தாக செய்திகள் வெளியாகின. இந்த விமானம் தற்போது விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, பெடரல் வங்கி மீட்புக் குழுவுக்கு மூத்த துணைத் தலைவரான பாபு கே ஏ மற்றும் தலைமை அலுவலகத்தின் துணைத் தலைவர் மொஹமட் சாகீர் டி ஏ ஆகியோர் பேஸுகையில், வங்கியிடம் இருந்து பெரிய தொகைகளைப் பெற்றபின் கடன்களை செலுத்தாத கடனாளிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வங்கி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் உள்ள மற்ற கடனாளிகளுக்கு எதிராகவ்வும் இதே போன்று நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

More articles

Latest article