இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது உலக நாடுகளை அச்சமடைய வைத்துள்ளது.

பல நாடுகள் இந்தியா செல்வதற்கு தங்கள் குடிமக்களுக்கு தடை விதித்துள்ளதோடு விமான சேவையையும் நிறுத்தி வைத்துள்ளது.

அமெரிக்காவின் முன்னணி தொற்று நோயியல் நிபுணரும் அமெரிக்க அரசின் மருத்துவ ஆலோசகருமான டாக்டர் அந்தோனி ஃபாசி, இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்ய நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை மையம் (சி.டி.சி.) இந்திய அதிகாரிகளுடன் பேசி வருவதாக தெரிவித்தார்.

என்ன வகையான உருமாறிய கொரோனா தாக்கியுள்ளது, அதனை தற்போதுள்ள தடுப்பூசி கட்டுப்படுத்துமா என்பது குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில், இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் இந்தியாவுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.