பெங்களூரு:
அதீத மது போதையில், தான் பெற்ற குழந்தைகளையே துடிதுடிக்க கழுததை நெரித்து குடிநோயாளி கொன்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தையே அதிரவைத்துள்ளது.
பெங்களூரு சுப்ரமணியபுராவை சேர்ந்தவர் சதீஷ். இவரதுமனைவி ஜோதி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சதீஷ் ரத்த கறை படிந்த சட்டையுடன் நடமாடி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் தெரிவித்த தகவலால் போலீசாரே அதிர்ச்சி அடைந்தார்கள். சதீஷ் அளித்த வாக்குமூலம் இதுதான்:
“எனக்கு குடிப்பழக்கம் உண்டு. குடியை விடச் சொல்லி மனைவி அடிக்கடி சண்டை போடுவார். அதனால் ஆத்திரமாகி நான் அடித்துவிடுவேன். சில நாட்களுக்கு முன் இதே போல் சண்டை வர, மனைவியை கடுமையாக அடித்துவிட்டேன். அவள் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
மறுநாள் காலையில் மது குடித்த எனக்கு, மனைவியை பழி வாங்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. பள்ளிக்கு சென்று எனது இரு மகன்களையும் வீட்டிற்கு அழைத்து வந்தேன். பிறகு இருவரையும் கழுத்தை நெரித்து கொன்றேன். பிறகு வெளியே சுற்றிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அக்கம்பக்கத்தின் என் மீது சந்தேகப்பட்டு போலீஸூக்கு தகவல் சொல்லிவிட்டார்கள்” என்றார்.
பெற்ற குழந்தைகளையே மது வெறியில், கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel