சென்னை: அரசு ஊழியர்களின் கோரிக்கையை செயல்படுத்தாத திமுக அரசை கண்டித்து வரும் 23ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ, ஜியோ பழைய ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், அதுதொடர்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்ம் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளை கடந்த நிலையில், இன்றுவரை அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தற்போது வரை நிறைவேற்றவில்லை என ஜாக்டோ-ஜியோ அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது இந்த ஆண்டு பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்திரந்த அரசு ஊழியர்களுக்கு, பட்ஜெட்டில் ஈட்டிய விடுப்பு மட்டுமே அறிவிக்கப்பட்டதால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து, தங்களது 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ஒருநாள் ஒருநாள் அடையாள போராட்டம் நடத்திய நிலையில், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 23-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ – ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 23-ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
சென்னை எழிலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.