டெல்லி: நாடு முழுவதும் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இன்று (பிப்.15) நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்லும்போது நேர விரயம் ஆவதைத் தடுப்பதற்காக பாஸ்டேக் திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் 2019ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி முதல் அறிமுகம் செய்தது. பின்னர் தொடர்ந்து வாகன ஓட்டிகள் பாஸ்டேக் பெற பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.
பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான அவகாசம் பிப்ரவரி 15ந்தேதிமுதல் நள்ளிரவுடன் முடியும் நிலையில் மத்திய அரசு, மேலும் காலஅவகாசம் வழங்க மறுத்துவிட்டது.
இதையடுத்து, பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் வழக்கமான கட்டணத்தை விட இருமடங்கு செலுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.