குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 29 ம் தேதி கடைசி நாள்.

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பாக பொது வேட்பாளரை நிறுத்த மம்தா பானர்ஜி முயற்சி மேற்கொண்டு வந்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது அதற்கு தனது உடல்நிலையை காரணம் காட்டி சரத் பவார் மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரின் பெயரை மம்தா பரிந்துரைத்தார்.

இது ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட தனது பெயரை பரிந்துரை செய்ததற்காக மம்தா பானர்ஜி-க்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் மாநில அரசியலில் கவனம் செலுத்தவேண்டிய தேவை தனக்கு உள்ளதாக பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதனால் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட தனது பெயரை பரிந்துரை செய்ததை வாபஸ் பெறுமாறு மம்தா பானர்ஜி-க்கு வேண்டுகோள் வைத்ததோடு தனக்கு ஆதரவளிப்பதாக கூறிய தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதன் மூலம், பொது வேட்பாளரை நிறுத்தும் எதிர்க்கட்சியின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக கருதப்படுகிறது.

குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு எவ்வளவு பலம்