விவசாயிகள் போராட்டம் மேலும் தொடரும் : விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

Must read

டில்லி

வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டம் மேலும் தொடரும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

டில்லியில் சுமார் 40 நாட்களாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இதையொட்டி மத்திய அரசுடன் நடத்திய அனைத்து பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.  இந்த போராட்டத்தை நடத்தும் சம்யுக்த் கிசான் மோர்சா என்னும் அமைப்பே இந்த போராட்டத்தின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாகும்.

உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற ஒரு குழுவை அமைத்து ஆய்வு நடத்த உள்ளது.  அந்த குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இது குறித்து சம்யுக்த் கிசான் மோர்சா அமைப்பின் தலைவர் பல்பீர் சிங் ரஜேவால், “எங்களுக்கும் உச்சநீதிமன்றத்தில் நடப்பவற்றுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.  நாங்கள் அரசுடன் வரும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்த உள்ளோம்.

நாங்கள் எந்த ஒரு குழுவையும் அமைத்துப் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது கிடையாது.  இந்த தீர்ப்புக்குப் பின்னால் மத்திய அரசு உள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம்.  வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரையில் எங்கள் போராட்டம் மேலும் தொடரும்” என அறிவித்துள்ளார்.

More articles

Latest article