சத்தீஸ்கர்: விவசாயிகளின் 10 நாள் போராட்டத்திற்கு பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் சங்கம் பத்து நாட்களுக்கு காய்கறிகள் மற்றும் பால் போன்றவற்றை விற்பனை செய்வதை நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளது. இவர்களுக்கு ஆதரவாக  தற்போது பஞ்சாப் மாநில விவசாயிகளும் இணைந்துள்ளனர்.

விவசாய கடன் தள்ளுபடி, பயிர் உற்பத்திற்கு 50 சதவிகித  தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 7 மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநில அமைச்சர்களில் ஒருவரும், கிரிக்கெட் முன்னாள் வீர்ருமான சித்து விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளார்.

சுவாமிநாதன் பரிந்துரைகளை நடைமுறை படுத்தாததும், விவசாயிகளுக்கு போதுமான தொகையை அளிக்காததுமே அவர்களை தற்கொலைக்கு தூண்டுவதாக சித்து கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று குல்ஜித் சிங் நாக்ரா மற்றும் குர்ப்ரீத் சிங் உள்ளிட்ட  எம்.எல்.ஏ.க்கள் சித்துவுடன் சேர்ந்து விவசாயிகளிடம் பால் மற்றும் காய்கறிகளை விலைக்கு வாங்கினர். விவசாயிகளிடம் நேரிடையாக பொருள்களை விலைக்கு வாங்கிய அரசின் கவனைத்து ஈர்க்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். கடந்த 25 ஆண்டுகளில் எண்ணெய்களின் குறைந்த பட்ச விலை 12 மடங்கு அதிகரித்துள்ளதாக மூன்று எம்.எல்.ஏ.க்களும்  ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். உதாரணமாக ரூ.20 க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.80 ஆகவும், ரூ. 16 க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்ட பால் ரூ. 45 என்று மட்டுமே  உயர்ந்துள்ளதாக சித்து குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல் டீசல் விலையில் ஒரு ரூபாய் குறைத்துள்ளது மக்களை நகைச்சுவைக்கு உள்ளாக்குவதாகவும் உள்துறை அமைச்சர் சித்து சாடியுள்ளார்.