Farmers issue: Centre could only formulate a line of action. The actual implementation was the responsibility of the states – Centre

 

விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்க்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளுக்கே உண்டு என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

 

விவசாயிகள் தற்கொலை குறித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல மனு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் எந்தத் தீர்வுமின்றி தொடர்கிறதே’ என மத்திய அரசு வழக்கறிஞர் நரசிம்மாவிடம், தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.  ‘விவசாயிகளுக்கு கடனும் கிடைப்பதில்லை, உற்பத்திக்கு உரிய குறைந்தபட்ச ஆதார விலையும் கிடைப்பதில்லை, பயிர்க்காப்பீட்டுத் தொகை கிடைப்பதிலும் தாமதம்…இதற்கு என்னதான் தீர்வு’ என மேலும் அவர் கேள்விகளை அடுக்கினார். விவாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான தொலை நோக்குத் திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும் எனவும் அப்போது நீதிபதி கெஹர் வலியுறுத்தினார். விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்வது குறித்து ரிசர்வ் வங்கியின் கொள்கையை உச்சநீதிமன்றம் அறிய விரும்புவதாகவும் தலைமை நீதிபதி கெஹர் அப்போது கூறினார்.

 

அப்போது ‘விவசாயிகள் தற்கொலை துரதிர்ஷ்ட வசமானது’ என்று பதிலளித்த அரசு வழக்கறிஞர் நரசிம்மா, அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களை வகுப்பது மத்திய அரசுதான் என்றாலும், அவற்றை நடைமுறைப் படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளுக்கே உண்டு எனக் கூறினார்.