புனே:
தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்ததால் பலர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் விவசாயி ஒருவர் கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளார்.
புனேயைச் சேர்ந்த ஈஸ்வர் காய்வர் என்ற 36 வயது விவசாயி மற்றும் அவர் மனைவி ஜூன்னர் ஆகியோர் தக்காளியை விற்று இதுவரை 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பணம் ஈட்டியுள்ளனர்.
மூன்றரை கோடி வரை தக்காளி விற்க அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். ஆறேழு ஆண்டுகளாக தக்காளி விதைத்து பலமுறை பல்லாயிரக்கணக்கில் நஷ்டம் அடைந்ததற்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளதாக அந்த தம்பதியர் கூறுகின்றனர்.
Patrikai.com official YouTube Channel