டெல்லி: குறைந்தபட்ச ஆதார விலை இல்லாமல் வேளாண் சட்டம் திருப்பபெற்றது அர்த்தமற்றது என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்து உள்ளார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் 29ந்தேதி) இன்று தொடங்கிa டிசம்பர் 23ந்தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 19அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்றைய முதல்நாள் கூட்டத்தொடரிலேயே 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் கூடிய நிலையில், எதிர்க்ட்சி எம்.பி.கிகளின் சலசலப்புக்கு மத்தியல் குரல் வாக்கெடுப்பின் மூலம் வேளாண் சட்டம் வாபஸ் மசோதா இரு அவைகளிலும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, வேறுவழியின்றி மத்தியஅரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளது என்று விமர்சித்தவர், இடைத்தேர்தல்களில் பெற்ற தோல்வியே பாஜக அரசை வேளாண் சட்டங்களை திரும்ப பெற வைத்துள்ளது என்றும், குறைந்தபட்ச ஆதார விலை இல்லாமல் வேளாண் சட்டம் திருப்பபெற்றது அர்த்தமற்றது என்றும் தெரிவித்து உள்ளார்.