சென்னை:
சென்னையில் இருந்து மும்பை, டெல்லி விமான கட்டணம் உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு விமானங்களுக்கான தடை நீக்கப்பட்டதால் சென்னையில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் இணைப்பு விமானமாக மும்பை, டெல்லி சென்று அங்கிருந்து பயணிக்கின்றனர். இதன் காரணமாக டெல்லி, மும்பைக்கு அதிக பயணிகள் செல்கிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு தினமும் 20 விமானங்களும், டெல்லிக்கு 19 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலும் வெளி நாடுகளுக்கு செல்பவர்களே பயணிக்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]