சென்னை

சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் கட்டா விவரம் வெளியிடப்பட்டுள்ளது.’

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. எனவே வடசென்னை பகுதிகளில் உள்ள மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்வதில் சிரமத்தைச் சந்தித்தனர்.

ஆகவே வடசென்னை மக்களின் வசதிக்காகத் தென் மாவட்டங்களுக்குச் செல்ல 20% பேருந்துகளை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து அமைச்சர் சிவசங்கர் இன்று தொடக்கிவைத்தார்.

அதாவது மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்கு 18, சேலத்துக்கு 17, விருத்தாசலத்துக்கு 6, கள்ளக்குறிச்சிக்கு 16, விழுப்புரத்துக்கு 16, கும்பகோணத்துக்கு 14, சிதம்பரத்துக்கு 5, நெய்வேலிக்கு 11, கடலூர் வழியாகப் புதுச்சேரி, திண்டிவனத்துக்கு 5, புதுச்சேரிக்கு திண்டிவனம் வழியாக 10, செஞ்சி வழியாகத் திருவண்ணாமலைக்கு 22, போளூா் மற்றும் வந்தவாசி ஊர்களுக்கு 20 என மொத்தம் 160 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தற்போது மாதவரத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மாதவரம் – கிளாம்பாக்கம் ரூ. 40, ரெட்டேரி – கிளாம்பாக்கம் ரூ. 35, அம்பத்தூர் – கிளாம்பாக்கம் ரூ. 30, மதுரவாயல் – கிளாம்பாக்கம் ரூ. 25, பெருங்களத்தூர் – கிளாம்பாக்கம் ரூ. 10 வசூலிக்கப்படும் என்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்துடன் சேர்த்து இந்தக் கட்டணமும் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.